கோதுமை மா

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இன்றிலிருந்து கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோத்தர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விலை அதிகரிப்புக்கான காரணம் என்னவென்பது குறித்து, பிரிமா நிறுவனம் அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.