Sri Lanka 24 Hours Online Breaking News

கோபப்பட்ட கங்கணா: எஸ்கேப் ஆன ரிச்சா

0

தாம் தூம் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இந்தி நடிகை கங்கணா ரணாவத், தனது வெளிப்படையான பேச்சினால் பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கியவர் என்ற பெருமையும் கொண்டவர்.

தற்போது தனது ‘பங்கா’ எனும் புதிய படத்துக்கான புரமோஷன்களில் ஈடுபட்டிருக்கும் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நிர்பயா குற்றவாளிகள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, “குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிடுவதன் மூலம் அனைவருக்கும் ஒரு பாடம் புகட்ட முடியும்.
நிர்பயாவின் தாயார் நீண்ட காலமாக நியாயத்திற்காகப் போராடி வருகிறார். இதுபோன்ற கொடூர குற்றம் புரிந்தவனை மைனராகக் கருதக் கூடாது” எனறு கங்கணா கூறினார்.

மரண தண்டனைக்கு எதிரான கருத்துக்கொண்ட மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்தி தனது கணவரைக் கொன்றவரை மன்னித்தது போல நிர்பயாவின் தாயாரும் மன்னிக்க வேண்டும்.

அவருடைய துன்பத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், மரண தண்டனையை எதிர்க்கிறேன் எனக் கருத்து பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து கங்கணாவிடம் கேட்டபோது கோபமடைந்த அவர், “இந்திரா ஜெய்சிங்கையும் குற்றவாளிகளோடு சிறையில் அடையுங்கள். எவ்வாறு ஒரு பெண்ணால் இதுபோன்ற குற்றவாளிகளிடம் பாவம் காட்ட முடிகிறது.

இவர் போன்ற பெண்கள்தான் இந்தக் கொடூர குற்றவாளிகளுக்குப் பிறப்பளிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் நடைபெற்றபோது கங்கணாவுக்கு அருகில் அமர்ந்திருந்த நடிகை ரிச்சா சதா திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார்.

காரணம், இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பு தான், சாலையில் செல்லும் ஆண்கள், பெண்களையெல்லாம் கட்டியணைத்து ஆண் பெண் பேதமின்றி நிம்மதியாய் வாழ வேண்டும் என்ற தத்துவத்தைச் சொல்லி, உலக கட்டியணைத்தல் தினம் குறித்த விழிப்புணர்வைப் பரவச் செய்து கொண்டிருந்தார்.

இதனால்தான், கங்கணா அப்படி பேசியபோது ரிச்சாவின் முகம் அப்படி மாறியது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். கங்கணா அப்படி பேசிய பிறகு, ரிச்சாவிடம் மைக்கை நீட்டியபோதும் அவர் வாங்கிப் பேச மறுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார்.

இந்த வீடியோவை காமெடியாகப் பதிவு செய்யும் அதே நேரத்தில், ஒரு மூத்த பெண் வழக்கறிஞரை ஜெயிலில் அடைக்க வேண்டும் என கங்கணா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துக்கு எதிர்க்கருத்து கூறினால் சிறையில் தள்ள வேண்டும் எனப் பேசுவதா என பாலிவுட் பிரபலங்களே ஜாடை மாடையாக ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like