“கோரிக்கை விடுத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசத் தயார்”

“கோரிக்கை விடுத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசத் தயார்”

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மக்கள் விடுதலை முன்னணியுடன் இன்றைய தினம் நடைபெற உள்ள சந்திப்பு பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த விடயம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற
அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வது தமது கடமையும்
பொறுப்புமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் மக்கள் விடுதலை முன்னணியின் வேண்டுகோளின் பிரகாரம் இச்சந்திப்பு இடம்பெறுவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்கள் வேண்டுகோள் விடுத்தால், நாட்டிற்கு நன்மைபயக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம், மக்கள் விடுதலை முன்னணியுடன் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளில் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

Related posts