சிறுமியின் சடலம்

புதையலுக்காக பூசாரி மற்றும் இரண்டு பெண்களை ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தனக்கள்ளமண்டலம் கோர்த்திகோட்டை பகுதியில் பழமையான பல கோயில்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், இங்குள்ள ஒரு சிவன் கோயிலில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். மேலும் கோயிலில் உள்ள சிவலிங்கம் மற்றும் கோயிலின் நுழைவு வாயிலில் ரத்தம் பூசப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், மோப்ப நாய்களுடன் வந்த காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் அதே கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவரான் என்பது தெரிய வந்தது.

அத்துடன், அவரது சகோதரி கமலம்மா, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா லட்சுமியம்மா என மூன்று பேரும் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும் கோயிலின் உள்ளே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டிருந்ததால், கோயிலின் உள்ளே புதையல் இருப்பதாக நினைத்து மூவரையும் யாரேனும் நரபலி கொடுத்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பூசாரி உட்பட மூன்று பேரையும் கொலை செய்த நபர்களைத் தேடி வருகின்றனர்.