Sri Lanka 24 Hours Online Breaking News

“சச்சினின் விக்கெட்டை வீழ்த்தியது மறக்க முடியாத ஒன்று”

0

டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்தியது ஹாட்ரிக் எடுப்பதற்கு சமமானது என்று ஓய்வுப் பெற்ற ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் பீட்டர் சிடல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளா் பீட்டர் சிடல் (35) சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக நேற்று அறிவித்தார்.

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திற்கு, அணியில் சோ்க்கப்பட்டிருந்த பீட்டா் சிடலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுவரை 67 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள இவா், 221 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த 13-ஆவது வீரா் பீட்டா் சிடல் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஒரு நாள் ஆட்டங்களிலும், 2 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ள இவா், உள்ளூா் கிரிக்கெட்டில் தொடா்ந்து விளையாடப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள பீட்டர் சிடல் “இந்தியாவில் மொஹாலி ஆடுகளத்தில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்தியது, என் பிறந்தநாளில் ஆஷஸ் தொடரில் ஹாட்ரிக் எடுத்தது ஆகியவை என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் என தெரிவித்துள்ளார்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

You might also like