Sri Lanka 24 Hours Online Breaking News

சஜித்தின் இதயத்துடன் சங்கமித்த மனோ, ஹக்கீம், சம்பிக்க

0

சஜித் பிரேமதாச தலைமையில் மலரவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி எனும் அரசியல் கூட்டணியில் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முக்கியமான மூன்று கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியனவே இந்த முடிவை எடுத்துள்ளன.

இது தொடர்பில் மேற்படி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

தீர்க்கமான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பதவியேற்றுள்ள இன்றைய அரசு வெகு சீக்கிரமாகவே மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதுடன், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அரசியல் பழி வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

நாம் சமகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் அதனூடாக பல்வேறு வெற்றிகளையும் பெற்றுள்ளோம்.

இந்த பின்னணியில் எதிர்வரும் தேர்தலை புதிய ஒரு கூட்டணியாக எதிர்கொள்ள ஐதேகவின் செயற்குழு தீர்மானித்து, அந்த கூட்டணியின் தலைமை, கூட்டணி பொது செயலாளரை தீர்மானிக்கும் அதிகாரம், பிரதமர் வேட்பாளர், வேட்பாளர் தெரிவு குழு தலைமை ஆகியவற்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிட முடிவுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த முடிவுகளை எம் கவனத்தில் எடுத்து, சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமாகும் புதிய பரந்துபட்ட கூட்டணியில் எமது கட்சிகள் இணைந்து செயற்படுவதை நாம் உறுதி செய்கிறோம்.

அதன்படி, ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் கரங்கோர்த்துக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணியில் செயற்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

பாடலி சம்பிக்க ரணவக்க
பொதுசெயலாளர் – ஜாதிக ஹெல உறுமய

மனோ கணேசன்
தலைவர் – தமிழ் முற்போக்கு கூட்டணி

ரவுப் ஹக்கீம்
தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like