சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய பிரஜைகள் கைது

41
பாதாள உலக குழு
colombotamil.lk

 

 

நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் மூவர், தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இன்று கல்கிஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.