ஊடக அறம், உண்மையின் நிறம்!

சந்திரயான் 3 பாயும் திகதியை வெளியிட்டது இஸ்ரோ

சந்திரயான் 3 அடுத்த வருடம் நவம்பர் மாதம் விண்ணில் பறக்கும் என்றும், அதில் அனுப்பப்படும் லேண்டர் சாதனையை நிகழ்த்தும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென் துருவத்தை ஆராயும் வகையில், சந்திரயான் 2 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் அனுப்பப்பட்டது.

சந்திரயான் 2ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டரும் ரோவரும் இப்போதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனினும், சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.

இந்த நிலையில், இஸ்ரோ இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் நவம்பர் மாதம் 2020ல் சந்திரயான் 3 விண்வெளிக்கு அனுப்பப்படும் எனக் கூறியுள்ளது.

அதேபோல், சந்திரயான் 3ல் லேண்டர், ரோவர் இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்த திட்டத்தில் ஆர்பிட்டர் அனுப்பும் திட்டமில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இப்போதுள்ள ஆர்பிட்டர் சிறப்பாகச் செயல்படுவதால், ஆர்பிட்டர் தேவையில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதியுள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியாகும் முன் சந்திரயான் 3 குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர். சந்திரயான் 3ஆல் அனுப்பப்படும் லேண்டர் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், ‘இப்போது நாங்கள் திட்டமிட்டுள்ள லேண்டர் அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும், அதன் கால்கள் மிக வலிமையாக இருக்கும், இந்த முறை லேண்டர் தரை இறங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லாத வகையில் நாங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.

இந்த நேரத்தில், சந்திரயான் 2டுடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நிலவை வட்டமிட்டு, முப்பரிமாண படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. அந்த படங்களை வைத்து நிலவில் உள்ள பள்ளங்களையும், பள்ளங்கள் தோன்றியதற்கான காரணங்களையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram