ஊடக அறம், உண்மையின் நிறம்!

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது இல்லை என்ற நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு, அந்த கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 60க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த மேல்முறையீட்டு வழக்கை 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில், சபரிமலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று முதல் விசாரணை நடைபெறும் என கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரிக்கப்போவதில்லை என 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

‘சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாமா என்பது மட்டும் அல்லாது கோயில் மற்றும் மசூதிகளிலும் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் தொடர்புடைய விஷயமா எனவும் விசாரிக்க உள்ளோம்.
சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட கேள்விகள் பற்றி மட்டுமே விசாரணை நடத்தப்படும். தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் குறித்து விசாரிக்க போவதில்லை’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.