Sri Lanka 24 Hours Online Breaking News

சமகி ஜனபல வேகய கூட்டணி குறித்து இன்று இறுதி தீர்மானம்

0

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சமகி ஜனபல வேகய எனப்படும் கூட்டணியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (14) மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து கலந்துரையாட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய கூட்டணி தொடர்பில் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதிய கூட்டணியின் சின்னமாக இதயத்தை தெரிவுசெய்துள்ள போதும், அதற்கு செயற்குழுவில் உள்ள பெரும்பலான உறுப்பினர்கள் இணக்கம் வெளியிடவில்லை.

யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என, பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க் கட்சித் தலைவர் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

அந்த கலந்துரையாடலில் எதிர்க் கட்சித் தலைவர், கபீர் ஹசீம், ரஞ்ஜித் மத்தும பண்டார உள்ளிட்டவர்கள் பங்கேற்றதுடன் அவர்கள் புதிய கூட்டணியின் சின்னமான யானை சின்னத்தை பெயரிட ரணில் விக்ரமசிங்கவிடம் அனுமதி கோரிய போதிலும் அதற்கு அவர் இணங்கவில்லை.

அதற்கு பதிலாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிடுமாறும் கூட்டணியின் பொதுச் செயலாளராக ஜோன் அமரதுங்க அல்லது தயா பெல்பொல ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க கூடிய இயலுமை உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தீர்க்கமான நிலைமை தொடர்பில் ரணில் மற்றும் சஜித் தரப்பினர் தனித்தனியாக ஊடக சந்திப்புகளை நடத்தி தத்தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையிலேயே ´சமகி ஜனபலவேகய´ எனப்படும் ஒற்றுமையின் சக்தி என்ற கூட்டணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்க சஜித் பிரேமதாச இன்று (14) ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like