ஊடக அறம், உண்மையின் நிறம்!

சமன் ரத்னபிரியவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட சமன் ரத்னபிரியவின் பெயர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று (23) அறிவிக்கப்படவுள்ளது.

கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு சமன் ரத்னபிரிய பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜயம்பதி விக்ரமரத்னவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நேற்று (22) அறிவிக்கப்பட்டிருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.