ஜெனிலியா

தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம், சச்சின் உள்பட பல படங்களில் நடித்த வர் ஜெனிலியா. மும்பை நடிகையான இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாகி விட்டார்.

இதையடுத்து மீண்டும் ஜெனிலியா நடிக்க வருவதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தனது மறுபிரவேசத்தை உறுதிப்படுத்தும் வகையில், தனது தற்போதைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் முன்பு பார்த்த அதே ஜெனிலியா போன்று அவர் ஸ்லிம்மாக இருப்பது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.