தேசிய அரசாங்கம்

மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிப்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் இன்று முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன, இன்றைய தினம் முக்கிய தீர்மானத்தை எடுக்கும் என கூறப்படுகின்றது.

குறித்த கட்சிகள் இன்று(11) காலை, நாடாளுமன்றத்தில் தனித்தனியாக கூடி முடிவுகளை எடுக்கவுள்ளன என அறியமுடிகின்றது.