சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், ‘ட்ரோன்’ மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில், அரசு நிறுவனமான அரம்கோவுக்கு ஏராளமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.

தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புக்கியாக் என்ற இடத்தில், அரம்கோவுக்கு சொந்தமான, பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில், தினமும் 70 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த ஆலை மீதும்,குராயிஸ் நகரில் உள்ள ஆலை மீதும், நேற்று(14) காலை ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால், சுத்திகரிப்பு ஆலையிலும், எண்ணெய் வயல்களிலும் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை, அணைத்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தாக்குதலால் ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்களை சவுதி அரசு வெளியிடவில்லை. இந்த தாக்குதலுக்கு, ஏமனை சேர்ந்த ஹவுதி பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில், சவுதி அரம்கோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால், புக்கியாக் மற்றும் குராயிஸ் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தீப்பிடித்து எரிந்தன.

இதனால் நாள் ஒன்றுக்கு 5.7 மில்லியன் பேரல்கள், கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
உடனடியாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

எண்ணெய் உற்பத்தியை மீண்டும் துவக்க, விரைவாக பணிகள் நடந்து வருகிறது. இது குறித்து அடுத்த அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியிடப்படும். இந்த தாக்குததல் சம்பவத்திற்கு இங்கிலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே, சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசினார். அப்போது, சூழ்நிலையை அமெரிக்க அரசு கவனித்து வருவதாகவும், சவுதியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்த ட்ரம்ப், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play