சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் நடைபெற்ற தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

அந்நாட்டின் தலைநகரான ரியாத்தில் இருந்து 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்கியாக் மற்றும் குரைஸ் ஊர்களில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இன்று அதிகாலையில் ஆளில்லாத இரு குட்டி விமானங்களை ஏவி தாக்குதல் நடைபெற்றது.

இதனால் தீ பற்றிக் கொண்ட நிலையில் உடனடியாக அதனை அணைக்கும் பணி நடைபெற்றதாகவும், தீ அணைக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஏமன் குர்தி பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

புக்கியாக்கில் உள்ள ஆலை உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். அங்கு நாள் ஒன்றுக்கு 7 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அந்த ஆலையை குறிவைத்து அல் கொய்தா பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலை சவுதி அரேபிய அரசு வெற்றிகரமாக முறியடித்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play