‘வேலையிட மனவுளைச்சலை’ சிகிச்சை தேவைப்படும் நிலையாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

ஜெனீவாவில் கூடிய வல்லுநர்கள், வேலையிட மனவுளைச்சலை வரையறுப்பதன் தொடர்பில் நடத்திய கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக, வேலையிட மனவுளைச்சலை அனைத்துலக நோய்ப் பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் சேர்த்துள்ளது.

அடையாளம் காணப்படவேண்டிய நோய்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதுடன், சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்கள் சரிபார்ப்புக் குறிப்பேடாக அதனைப் பயன்படுத்துவதுண்டு.

வேலையிடத்தில் தொடர்ந்து ஏற்படும் மனஅழுத்தம் சரியாகக் கையாளப்படாததன் விளைவு என்று அந்தப் பட்டியலில் ‘வேலையிட மனவுளைச்சல்’ வரையறுக்கப்பட்டுள்ளது.

எப்போதும் சோர்வாக உணருவது, வேலை தொடர்பான மனக்குறை, செயல்திறன் குறைபாடு போன்றவை அதற்கான அறிகுறிகள் என்று அந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.