ஊடக அறம், உண்மையின் நிறம்!

சிக்கனத்தை கடைபிடிக்கும் இந்திய திருமணங்கள்

இந்தியத் திருமண விழாக்கள் ஏக தடபுடலாக இருக்கும். விருந்து, கேளிக்கை, புத்தாடை என்று பல நாட்கள் நீடிக்கும் அந்தக் கொண்டாட்டம்.

செலவிடப்படும் தொகையைக் கணக்கிட்டுப் பார்த்தால் அது மலைக்க வைக்கும். ஆனால், இப்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளியலைக் கொண்டது இந்தியா. அதன் வளர்ச்சி தற்போது கணிசமாக மெதுவடைந்துள்ளது. அதனால், மக்கள் செலவைச் சுருக்கத் தொடங்கிவிட்டனர்.

வாழ்வில் எப்போதும் நினைத்து நினைத்துப் பார்த்து மகிழவேண்டிய மணநாளும் சிக்கனச் செலவுக்குத் தப்பவில்லை.

இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி ஆறு ஆண்டு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. நாற்பது ஆண்டுக காணாத அளவு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

இந்தியத் திருமண ஏற்பாட்டுச் சந்தையில் ஆண்டுக்கு 40இலிருந்து 50 பில்லியன் டாலர் வரை வர்த்தகம் நடைபெறும். இப்போது அந்த நிலை இல்லை.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று நாள் கணக்காக நீடிக்கும் திருமணக் கொண்டாட்டம், இப்போது பெரும்பாலும் களையிழந்து காணப்படுகிறது. பணக்காரர்கள் மட்டுமே செலவைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்து மக்களோ திருமணச் செலவைச் சுருக்கி, கொண்டாட்டத்தைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒரு நாள் நிகழ்வுக்காகப் பல்லாயிரம் ரூபாய் செலவு செய்துவிட்டுப் பின்னாளில் எண்ணியெண்ணி வருந்துவதை விட, இப்போதே வேறு வழிகளில் பணத்தைச் சேமிக்கலாமே என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் இந்திய நடுத்தர வர்க்கத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.