Close

‘சிங்கம்’ பாணியில் செயற்பட்ட காவல்துறை அதிகாரிக்கு அபராதம்

மனோஜ் யாதவ்.

சிங்கம் ஹிந்திப் படத்தில் வருவதுபோல், ஓடும் இரண்டு கார்களின் மீது நின்று சென்ற, மத்திய பிரதேச எஸ்.ஐ.,க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், டமோஹ் மாவட்டத்தில் உள்ள நரசிங்கர் பொலிஸ் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக உள்ளவர் மனோஜ் யாதவ்.

இவருக்கு திடீரென, சினிமா ஹீரோக்கள் போல் சாகசம் செய்ய வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழில், நடிகர் சூர்யா நடித்து வெளியான, சிங்கம் என்ற திரைப்படம், ஹிந்தியில், நடிகர், அஜய் தேவ்கன் நடிப்பில், அதே பெயரில் வெளியானது.

அதில், ஒரு காட்சியில், ஓடும் இரண்டு கார்கள் மீது நின்று, ஹீரோ செல்வார். அதுபோலவே, செய்ய ஆசைப்பட்டார் மனோஜ் யாதவ்.

மனோஜ் யாதவ்.

தன் வீர தீரத்தை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக, அந்த காட்சியை, ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளத்திலும் வெளியிட்டார்.

இதைப் பார்த்த, உயரதிகாரிகள், அவரை நேரில் அழைத்து, புத்திமதி கூறினர். இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது என, அவருக்கு எடுத்துக் கூறினர்.

இனி இதுபோல் எந்த பொலிஸ் அதிகாரியும் சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், அந்த எஸ்.ஐ.,க்கு, 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
x
scroll to top