நடுவர்களுடன் வாக்குவாதம் – தோனிக்கு அபராதம்!

44
டோனி
W3Schools

நேற்று ராஜஸ்தானில் நடைபெற்ற ஐபிஎல்-இன் 25ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானை கடைசி பந்தில் வென்று த்ரில் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரின் போது நடுவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் தோனிக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டது.

கடைசி ஓவரில் மூன்று பால்களுக்கு எட்டு ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து நோபால் என நடுவர்கள் முதலில் கூறிவிட்டு பிறகு இல்லை என்றனர்.

அதற்கு முந்தைய பந்தில்தான் தோனி ஆட்மிழந்திருந்தார். க்ரௌண்டில் உட்கார்ந்திருந்த தோனி கோபமாக நடுவர்களிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சர்வதேச போட்டிகளில் கூட தோனி இப்படி கோபப்பட்டதே இல்லை.

கேப்டன் கூல் என்று வர்ணிக்கப்படும் தோனிக்கு என்னவாயிற்று என்று வர்ணனையாளர்களுக்கே ஆச்சர்யம்தான். ஆனால் அந்த பந்தில் எடுக்கப்பட்ட இரண்டு ஓட்டங்களை ஏற்றுகொண்ட நடுவர்கள் நோ பாலை ஏற்றுக்கொள்ளாததால் சிறிது நேரம் பதட்ட நிலை ஏற்பட்டது.

நேற்றே கண்டிப்பாக இதற்கு தோனிக்கு நிச்சயமாக அபராதம் இல்லையென்றால் ஓரிறு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல விளையாட்டு விதிகளை மீறி அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்தப் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்போட்டியில் 43 பந்துக்கு 58 ஓட்டங்கள் எடுத்ததற்கான தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அணித்தலைவர் கூல் தோனி உலக அளவில் ட்ரெண்டானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

W3Schools