Sri Lanka 24 Hours Online Breaking News

சிரேஷ்ட கலைஞர்களுக்கு மருத்துவ காப்புறுதி

0

நாட்டின் சிரேஷ்ட கலைஞர்களுக்கு புதிய அவசர மற்றும் மருத்துவ காப்புறுதித் திட்டமொன்றை டவர் ஹோல் அரங்கு மன்றம் அறிமுகப்படுத்தவுள்ளது.


2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைவாக இந்த காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இதற்காக ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அந்த மன்றம் தெரிவித்துள்ளது.



60 வயதுக்கு மேற்பட்ட மேடை நாடக துறையுடன் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். அரசாங்கம் வழங்கும் ஏனைய காப்புறுதி திட்டங்கள் மூலம் பயனடைபவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியாது.

கலாபூஷணம் அல்லது அது போன்ற அரச மட்டத்திலான கௌரவ விருதுகளைப் பெற்றவர்கள், தேசிய மட்டத்தில் பிரபல நாடக விழாக்களில் பங்கேற்று அரச விருதைப் பெற்றிருத்தல் குறைந்த பட்சம் 20 வருடங்கள் இந்தத் துறையில் ஈடுபட்டிருத்தல் என்பன இதற்கான தகைமைகளாகும்.


விண்ணப்பப்படிவங்களை பதிவுத் தபால் மூலம் பணிப்பாளர் நாயகம் டவர் ஹோல் அரங்க மன்றம் சுவசிறிபாய இலக்கம் 123, விஜயராம மாவத்தை கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like