சிவனொளிபாதமலை அடிவாரத்தில் பதற்ற நிலை

50
W3Schools

சிவனொளிபாதமலை அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு இனந்தெரியாத சிலர் இதார் ஊற்றி சேதம் விளைவித்துள்ளனர்.

சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் மறைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அங்கு ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

W3Schools