22.3 C
Colombo
Tuesday, July 23, 2019
Home கட்டுரை சிவப்பு கம்பள வரவேற்பு கடவுளுக்கு மட்டுமே உரித்தானதா?

சிவப்பு கம்பள வரவேற்பு கடவுளுக்கு மட்டுமே உரித்தானதா?

சிவப்பு கம்பள வரவேற்பு உலகம் முழுவதும் சிறப்பு விருந்தினருக்கு அளிக்கப்படும் கவுரவம்…. பிரதமர்… அதிபர்… குடியரசு தலைவர் என முக்கிய நபர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும், அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு ஒரு கவுரவமாகவே பார்க்கப்படுகிறது.  உண்மையில், சிவப்பு கம்பள வரவேற்பு என்பது ஒரு காலத்தில் கவுரவத்தின் அடையாளம் கிடையாது. அது, பகையைத் தீர்த்துக்கொள்வதற்கான தருணமாகவே பார்க்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்பு, பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், கி.மு. 458 ஆண்டின் கிரேக்கத்தின் வரலாற்றிற்குள் நுழைய வேண்டும்….

இந்தியாவை, மகதப் பேரரசர் அஜாதசத்ரு ஆண்டு கொண்டிருந்த காலம் அது. கிரேக்கத்தில், Aeschylus என்பவரால் இயற்றப்பட்ட, தி அகமம்னான் (Agamemnon) என்ற நாடகத்தில், சிவப்பு கம்பள விரிப்பு வரலாறாக இடம் பெற்றுள்ளது. போர் நிமித்தமாக தனது மனைவி Clytemnestra பிரிந்து சென்ற மன்னன் அகமம்னான், போரின் வெற்றியோடு, இரண்டாவதாக ஒரு பெண்ணையும் அரண்மனைக்கு கொண்டு வருகிறார். வெற்றியைக் கொண்டாட காத்திருந்த Clytemnestra-விற்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. வேறு பெண்ணோடு வரும் தனது கணவனை பழி தீர்த்துக்கொள்வதற்காக, அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார் Clytemnestra…

சிவப்பு கம்பள வரவேற்பு என்பது கடவுளுக்கு மட்டுமே உரித்தானது, அதில், மனிதர்கள் நடந்தால், அவர்கள் அழிந்து போவார்கள் என்பது கிரேக்க நம்பிக்கை….இதனை அறிந்த அகமம்னான் மன்னன், அந்த சிவப்பு கம்பளத்தில் நடக்காமல் சென்றார். இந்த நாடகம், கிரேக்கத்தில் பல நூற்றாண்டுகள் அரங்கேற்றப்பட்டன.

ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் உலகமே துவண்டு கிடந்த காலத்தில், சிவப்பு கம்பள விரிப்பு என்பது அவர்களுக்கு புதிய கலாச்சாரமாகவே மாறிப்போனது. பின்னர், இது, 1821 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடியேறியது. தெற்கு கரோலினா நகருக்கு வந்த அதிபர் ஜேம்ஸ் மான்ரோவை, அம்மாகாண மக்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். சிவப்பு கம்பளத்தின் வரலாறு தெரியாத ஜேம்ஸ் மான்ரோ, அதில் நடக்க, அன்று முதல், சிவப்பு கம்பளம் கவுரவத்தின் அடையாளமாகவே மாறிப்போனது.

1920களில், ஹாலிவுட் சினிமா உலகை ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த சூழலில், ஹாலிவுட் பிரபலங்களை வரவேற்க சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. பிரபலங்களின் முகத்தில் விழுந்த வெளிச்சம், சிவப்பு கம்பளத்திற்கு புதிய வடிவத்தையும் கவுரவத்தையும் கொடுத்தது.  இந்தியாவைப் பொறுத்தவரை, சிவப்பு கம்பள வரவேற்பு என்பது, 1911-ல் தான் அறிமுகமாகியது.

டெல்லி தர்பாரின் புதிய மன்னராக பொறுப்பேற்ற ஐந்தாம் George-ஐ வைசிராய் Hardinge சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதே முதல் வரலாற்று நிகழ்வு. மக்களவையை விட, மாநிலங்களவை உயர்ந்தது என்பதை விளக்கும் வகையில், மக்களவையில் பச்சை கம்பள வரவேற்பும், மாநிலங்களவையில் சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்படுவது இன்றும் வழக்கமாகவே உள்ளது.

சினிமா

ஜோதிகாவின் ஜாக்பாட் டிரைலர் அவுட்!

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் ஜாக்பாட் படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள...

வில்லனாக நடிக்கும் சூர்யா

தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சூர்யாவை இனிமேல் வில்லனாக பார்ப்பீர்கள் என்று பந்தோபஸ்த் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்....

பிரபல கலைஞர் காலமானார்

பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் டப்பிங் கலைஞரான குசும் பீரிஸ் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி...

நயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் திகதி அறிவிப்பு

நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி...

ப்ரியா வாரியாருக்கு இந்த நிலையா?

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்து காதல் வலை வீசி இளவட்டங்களை கவர்ந்ததால் நடிகை பிரியா வாரியர் பெயர் பாலிவுட்வரை பரவியது. எதிர்பார்ப்புடன் வெளியான அப்படம் வெற்றியை ஈட்டாததால் பிரியாவாரியருக்கு அடுத்த படம்...

Download Our Aapp

நீதிபதியை தரையில் இழுந்து சென்ற பொலிஸார்

சகோதரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்ட நீதிபதியை தரதரவென பொலிஸார் தரையில் இழுத்துச் சென்றுள்ளனர். அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த பெண் நீதிபதி ஒருவர், தன் சொந்த...

12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற மாணவர்களுக்காக இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு பட்டதாரிகள் அனைவருக்கும் ஒரே தடவையில் தொழில்வாய்ப்புகளை வழங்கும்...

நாடாளுமன்ற செலவு எத்தனை மில்லியன் ரூபாய் தெரியுமா?

நாடாளுமன்ற வருடாந்த உணவு மற்றும் பானங்களுக்கான  120 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உணவுகள் வீணாகுவதை குறைப்பதற்காக, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவருந்த வருபவர்கள் பற்றிய விவரத்தை முன்னரே பெற்று, உணவு...

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு

பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது....

மருத்துவ பட்டதாரிகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டங்களைப் பெற்றுக்கொள்வோர், பதிவு செய்வதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சபையின் 16 ஆவது உறுப்புரையின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், இலங்கை...

ஜோதிகாவின் ஜாக்பாட் டிரைலர் அவுட்!

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் ஜாக்பாட் படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள...