சுறா தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

66
colombotamil.lk

பிரெஞ்சு தீவு ஒன்றில் சுறாத்தாக்குதலுக்கு உள்ளாகி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

Reunion தீவில் உள்ள Saint-Leu பகுதியில் இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை 30 வயதுடைய நபர் ஒருவர் தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் நீந்தியுள்ளார்.

இதன்போதே இவர் சுறா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இவருடன் மேலும் இருவர் என மொத்தம் மூவர் நீந்தியுள்ளனர். ஆனால் அதிஷ்ட்டவசமாக அவர்கள் சுறா தாக்குதலுக்குள் சிக்காமல் திரும்பியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு குறித்த நபரை சுறா தாக்கியுள்ளது. அவரது வலது காலை துண்டாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அவரது சடலம், பிராந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இடம்பெற்ற 24 ஆவது சுறா தாக்குதல் இது எனவும், 11 ஆவது உயிரிழப்பு இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.