ஊடக அறம், உண்மையின் நிறம்!

சுற்றுலா விடுதிகளில் 5 உஸ்பெக்கிஸ்தான் பெண்கள் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 பெண்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகளில் வைத்து 25 முதல் 35 வயதுகளை உடைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களை மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.