Close

செயற்கை மார்பகத்தால் உயிர் தப்பிய பெண்… நடந்தது என்ன?

கனடா நாட்டில் உள்ள டொரோண்டோ நகரை சேர்ந்த 30 வயதுடைய பெண், காலையில் நடைபயிற்சி சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் இவரது மார்பகத்தில் லேசான வலி எடுக்கவே, பக்கவாட்டில் தொட்டுப்பார்த்த சமயத்தில் இரத்தம் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றார்.

அதனையடுத்து, அம்பியுலன்ஸ் ஊடாக அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்று இது குறித்து கூறியுள்ளார்.

மருத்துவமனையில் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவரது இடது மார்பகத்தில் துப்பாக்கி குண்டு துளைத்து ஊடுருவ இயலாமல், வலது பக்க மார்பில் பாய்ந்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு காரணமாக அவரது செயற்கை மார்பகங்கள் அவரது உயிரை பாதுகாத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சண்டையிட்டுக் கொண்டிருந்த நபர்களால் இவர் சுடப்பட்டு இருக்கும்போது இவருக்கு செயற்கை மார்பகம் பொருத்தப்பட்டுள்ளதால் உணர்வு தெரியாமல் அவர் தப்பித்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
x
scroll to top