செல்ஃபி எடுத்த கஸ்தூரி – கடுப்பில் பேசிய கார்த்தி

22
W3Schools

‘ஜூலை காற்றில்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல நடிகரும், சிவகுமாரின் மகனுமான கார்த்தி கலந்து கொண்டார்.

இவ்விழாவை தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, கார்த்தியை அழைத்தவுடன் “நான் உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள போகிறேன். ஏனா, உங்க அப்பா இல்லல” என்று கூறினார்.

பின், கார்த்தி “ஏங்க இது ரொம்ப தேவையில்லாத ஒரு விஷயமாக இருக்கு” என்று அவரிடம் சொல்லிவிட்டு பேசத் தொடங்கினார்.

அவர் பேசுகையில் “இல்ல செல்ஃபிங்குற விஷயத்துக்கு மரியாதையே இல்லாம போச்சுல. யாருக்குமே ரெஸ்பெக்ட்டே கிடையாது. ஒரு கேட்டு போட்டோ எடுக்கணும்ங்கிறது கிடையாது. மூஞ்சிக்கு முன்னாடி கொண்டுவந்து நிறுத்துறது. ஒரு விவஸ்தையே கிடையாதுன்னு நினைக்குறேன்.

ஒரு போட்டோ எடுக்குறதுக்கு வந்து, ஒரு மரியாதையா கேட்டு எடுக்கணும்ங்கிறது கூட தெரியாத அளவுக்கு நம்ம ஆயிட்டமான்னு வருத்தமா இருக்கு” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2018) மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார் பிரபல நடிகர் சிவகுமார்.

அப்போது, தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ராகுல் என்பவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதால் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து சிவகுமார் ஒரு வீடியோ பதிவின் மூலம் வருத்தமும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, ராகுலுக்கு ரூ.21,000 மதிப்புள்ள புதிய போனையும் சிவகுமார் சார்பாக நேரில் வழங்கப்பட்டது.

சமீபத்தில், இயக்குநரும், நடிகருமான ஈ.ராம்தாஸ் வீட்டின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகுமார். அங்கும் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

W3Schools