வைத்தியர் ஷாபி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர்நீதிமன்றத்திடம் கோராப்பட்டுள்ள வியாக்கியாணம் கோரிக்கையை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்படாதிருக்கும் நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு முடியுமா என, ஜனாதிபதி வியாக்கியாணம் கோரியுள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இது தொடர்பாக தீர்மானம் எடுத்துள்ளார். இதன்படி அவர் தலைமையில் புவனேக அலுவிகார , சிசிர டி ஆப்று , பிரசன்ன ஜயவர்தன , விஜித் மலல்கொட ஆகிய நீதியசர்களை உள்ளடக்கியதாக அந்த குழுவை அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

இந்த குழு எதிர்வரும் 23ஆம் திகதி கோரிக்கை விண்ணப்பத்தை ஆராயவுள்ளதுடன் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.