Sri Lanka 24 Hours Online Breaking News

ஜானு: 96 ரசிகர்களுக்கு மீண்டும் இசை விருந்து

0

விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலையும் நட்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படத்தை ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது.

கன்னடத்தில் 99 என்ற பெயரில் கணேஷ் மற்றும் பாவனா நடித்து படம் வெளியானது. ஆனால், 96 படத்தின் உணர்வைக் கடத்தத் தவறி 99 திரைப்படம், தமிழ் ரசிகர்களின் விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில் தெலுங்கில் ரீமேக்காகும் படத்துக்கு ‘ஜானு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி நடித்த ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும், த்ரிஷா கையாண்ட ஜானு வேடத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.

96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் சிறுவயது ஜானுவாக அனைவரையும் கவர்ந்த கவுரி கிஷன் தெலுங்கு ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜானு படத்தில் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தில் இடம்பெறும் பிராணம் என்னும் பாடல் வெளியாகியுள்ளது.

சின்மயி மற்றும் கெளதம் பரத்வாஜ் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை ஸ்ரீமணி எழுதியுள்ளார்.

தமிழில் ‘காதலே காதலே’ பாடலுக்குப் பதிலாகத் தெலுங்கில் இடம்பெறும் பிராணம் பாடலும் ரசிகர்களின் மனத்தை வருடி அனைவரையும் கவர்ந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like