சினிமா

ஓவர் அலம்பல்.. கொரோனா கலவரத்திலும் அடங்காத நடிகை

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் கொரோனா பீதியால் ஜிம் உள்ளிட்ட பல இடங்கள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளன.

பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் தனது காதலருடன் விஐபி டிக்கெட் மூலம் ஜிம்முக்கு சென்று வரும் தகவல் வைரலாக பரவி வருகிறது.

அனகொண்டா, தி செல், தி பாய் நெக்ஸ்ட் டோர், கடந்த ஆண்டு வெளியான ஹஸ்ட்லர்ஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் ஜெனிஃபர் லோபஸ்.

50 வயதிலும் இவ்வளவு செக்ஸியான தேகத்தை ஜெனிஃபர் லோபஸ் கொண்டிருக்க காரணம் தீவிரமான உடற் பயிற்சி தான்.

எந்த நேரத்திலும், எந்த காரணத்திற்காகவும், ஜிம்முக்கு போவதை ஜெனிஃபர் லோபஸ் நிறுத்துவதே இல்லை. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவே அலறி கிடக்கும் நேரத்திலும் ஜிம்முக்கு சென்று வருகிறார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 2 லட்சம் பேர் அவதிப்பட்டு வருகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையிலும், வீட்டில் அடங்கி இருக்காமல், தனது காதலருடன் விஐபி பாஸ் பெற்றுக் கொண்டு நடிகை ஜெனிஃபர் லோபஸ் ஜிம்முக்கு சென்று வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

50 வயதாகும் ஜெனிஃபர் லோபஸும் 44 வயதாகும் அவரது காதலர் அலெக்ஸ் ரோட்ரிக்ஸும் இணைந்து ஜிம்முக்கு போகும் போட்டோக்கள் இணையத்தை சர்ச்சையை கிளப்பியுள்ளன.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close