டிக்டாக் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

34
W3Schools

டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதினமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது.

மேலும் அந்த செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், டிக்-டாக் செயலி தடைக்கு எதிராக சீன நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து விட்டது.

W3Schools