Sri Lanka 24 Hours Online Breaking News

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை

0

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டத் தகவல்களின்படி அதிக இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.

70 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் கடந்த பிப்ரவரி 8ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான முடிவுகள் மீண்டும் டெல்லியில் ஆம் ஆத்மி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தன.

பாஜக கணிசமான இடங்களையும் காங்கிரஸ் ஒரு சில இடங்களையும் பிடிக்கும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்தன.

ஆட்சியைப் பிடிக்கப் பெரும்பான்மை 36 இடங்கள் என்ற நிலையில் இன்று காலை முதல் நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையில் ஆம்ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

அதன்படி 70 இடங்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 54இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக டெல்லி மக்களுக்குச் சேவை செய்திருக்கிறோம். ஆம் ஆத்மிதான் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் மனிஷ் சியோடியா தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், “நான் பதட்டமாக இல்லை. இன்று பாஜகவுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்போம். 55 இடங்களில் வென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இன்று மதியத்துக்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்று தெரியவந்துவிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like