டோனிக்கு தடை விதித்திருக்க வேண்டும் – ஷேவாக்

இதயும் பாருங்க

‘ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டி’

ஜனாதிபதி தேர்தலை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...

திருமண பந்தத்தில் இணையும் நமல் ராஜபக்ஷ

எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, திருமண பந்தத்தில் இன்று (12)...

5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த நபர், தனது 3ஆவது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ...

ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் டோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும் என ஷேவாக் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4-வது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது ‘நோ-பால்’ என்று அறிவித்தார்.

மற்றொரு நடுவர் ‘நோ-பால்’ இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த சென்னை அணியின் தலைவர் டோனி மைதானத்துக்குள் நுழைந்து ‘நோ-பாலை’ ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார்.

டோனியின் இந்த செயலை இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் வாகன், இந்திய முன்னாள் வீரர் பி‌‌ஷன்சிங் பெடி உள்பட பலரும் விமர்சனம் செய்து இருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவிக்கையில், ‘டோனி எளிதான தண்டனையுடன் விடுவிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். அவருக்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும். ஏனெனில் அவர் செய்ததை போல் நாளை மற்றொரு அணித்தலைவர் செய்யக்கூடும்.

அப்படியானால் நடுவருக்கு என்ன மரியாதை இருக்கும். அவர் மைதானத்துக்குள் செல்லாமல் 4-வது நடுவருடன் ‘வாக்கி-டாக்கி’ மூலம் பேசி முறையிட்டு இருக்க வேண்டும்.

டோனி இந்திய அணிக்கு ஏராளமாக பங்களித்து இருக்கிறார். அது மகிழ்ச்சியான வி‌‌ஷயம் தான். அவர் இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்த போது கோபப்பட்டதை நான் பார்த்தது இல்லை. சென்னை அணிக்காக அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக நினைக்கிறேன்’ என்றார்.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...

More Articles Like This