ஊடக அறம், உண்மையின் நிறம்!

தகவல் பதிவுப் பெட்டியை அமெரிக்காவிடம் கொடுக்கமுடியாது: ஈரான்

ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு தகவல் பதிவுப் பெட்டிகளையும் அமெரிக்காவிடமோ விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடமோ ஒப்படைக்கப்போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானிய விமான நிலையத்திலிருந்து விடியற்காலையில் புறப்பட்ட போயிங் 737-800 ரக விமானம், விமான நிலையத்துக்கு 45 கிலோமீட்டர் அப்பால் ஒரு புல்வெளியில் விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர்.

சர்வதேச விமானத்துறை விதிமுறைகளின்படி விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஈரானுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.

ஆனால், விமானம் ஒன்று விபத்துக்குள்ளானால் அதைத் தயாரித்த நிறுவனம் விசாரணையில் ஈடுபடுவது வழக்கம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தினர்.

அதோடு, ஒரு சிலரால் மட்டுமே தகவல் பதிவுப் பெட்டிகளில் பதிவான தகவல்களை ஆராய முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைத் தளங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்தில் விபத்து நேர்ந்தது.

எனினும், தாக்குதலுக்கும் விபத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.