‘தகுதியானவரை தெரிவுசெய்வது மஹிந்தவே’

இதயும் பாருங்க

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

ரெஜினோல்ட் குரே இராஜினாமா

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே தனது இராஜினாமா செய்துள்ளார்.

இராணுவ தளபதி நியமனம் இலங்கையின் உள்விவகாரம் – வெளிவிவகார அமைச்சு

இராணுவ தளபதி நியமனமானது இலங்கையின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என, அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் இன்று...

 

ஒன்றிணைந்த எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐவருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனை கூறிய அவர், முன்மொழியப்பட்ட ஐவரில் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், “நாடே அறியும்படி ஒகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எமது ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் அறிவிக்கவுள்ளோம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைவரினதும் இணக்கப்பாடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் தகுதியான ஒருவரை தெரிவு செய்யும் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வித் தகைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரின் கல்விப்பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை முடிந்தால் வெளிப்படுத்துமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.

அத்துடன், தமது தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் கல்வித்தகைமைகளை வெளிப்படுத்த தாங்கள் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது புதுசு

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக...

பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இலங்கைத் தமிழர்

பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் பெறவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும்...

யாழில் அமெரிக்க பிரஜையொருவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம்,...

வாகன விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் காயம்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆம் மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைதீவு நோக்கிச் சென்ற வான்,...

காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடியது பாகிஸ்தான்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின்...

More Articles Like This