‘தடையின்றி கிரியைகளை இனி மேற்கொள்ள முடியும்’

இதயும் பாருங்க

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

ரெஜினோல்ட் குரே இராஜினாமா

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே தனது இராஜினாமா செய்துள்ளார்.

இராணுவ தளபதி நியமனம் இலங்கையின் உள்விவகாரம் – வெளிவிவகார அமைச்சு

இராணுவ தளபதி நியமனமானது இலங்கையின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என, அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் இன்று...

கன்னியா வெந்நீருற்று கோவில் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவின் ஊடாக இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில், திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் தடையுத்தரவை பெற்ற பின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், “நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா வெந்நீரூற்று ஆதனத்தின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. மிக அவசரமான நான்கு விடயங்களுக்கும் நீதி மன்றத்தால் இன்று தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, இன்னுமொரு கோரிக்கையையும் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. அதாவது, இந்த வெந்நீருற்றுகளில்தான் இறந்த தங்களுடைய மூதாதைகளுக்கான பிதுர் கடன்களை இந்து சமயத்தவர் செய்வது வழக்கம்.

விசேடமாக ஆடி அமாவாசையன்று இதனை அனைவரும் மேற்கொள்வது வழக்கம். எதிர்வரும் 31ஆம் திகதி இந்த ஆடி அமாவாசை தினம் வருவதால், இந்து பக்தர்கள் அங்கு செல்வதை தடுக்கக் கூடாது என்ற தடையுத்தரவு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, எந்த தடையும் இல்லாது இந்துக்கள் ஆடி அமாவாசை தினத்தில் தங்களது கிரியைகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.

இது புதுசு

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக...

ப. சிதம்பரம் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். 2007ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில்...

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதி, ஜனாதிபதி...

விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. கடந்த 17ஆம் நாளுடன் ஓய்வுபெற்ற 22 ஆவது இராணுவத் தளபதி மகேஸ்...

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் இன்று முதல் ஊடகங்களுக்கு

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அரச காணக்காய்வு (கணக்கு) குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண...

More Articles Like This