தனக்கு தானே வாழ்த்து அனுப்பிய பாடகி

40
‘பாப்’ இசைப்பாடகி டெமி லோவட்டோ
W3Schools

அமெரிக்காவில் பிரபலமான, ‘பாப்’ இசைப்பாடகி டெமி லோவட்டோ (வயது 26). இவர் ஹென்றி லெவி என்ற ஆடை வடிவமைப்பாளரை காதலித்து வந்தார்.

இந்த காதலை டெமி குடும்பத்தார் ஏற்கவில்லை. பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து, அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் டெமி தனது காதல் தோல்வி சோகத்தை மறந்து வாழ்வில் தொடர்ந்து நடைபோட தன்னைத்தானே ஊக்குவிக்கிற வகையில் ஒரு வாழ்த்து அட்டை அனுப்ப முடிவு செய்தார். அதன்படி தனக்குத்தானே ஒரு வாழ்த்து அனுப்பினார்.

அந்த வாழ்த்து அட்டையில் அழகான இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்கள் படம் இடம்பெற்றிருந்தது. அதில், “ நீ அழகாக இருக்கிறாய். நீ நேசிக்கப்படுகிறாய். நீ மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியானவள்” என எழுதப்பட்டிருந்தது. மேலும், “சில நேரங்களில் உங்களுக்கு நீங்களே பூக்களை அனுப்புங்கள்” என எழுதப்பட்டிருந்தது.

இந்த வாழ்த்து அவரது இல்ல முகவரிக்கு அனுப்பப்பட்டு வந்து சேர்ந்தது. அதைக் கண்டு அவர் ஆறுதலும், மகிழ்ச்சியும் அடைந்தார்.

W3Schools