Sri Lanka 24 Hours Online Breaking News

தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு

0

மருத்துவர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இந்தக் கணக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என, நாடாளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றுகையில் அமைச்சர் கூறினார்.

மருத்துவர்களின் பெயர்களில் உள்ள தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கடந்த 2017ஆம் ஆண்டே இறுதியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய 657 மருத்துவ நிலையங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

உரிய தரத்தைப் பின்பற்றாத தனியார் மருத்துவ நிலையங்கள் காரணமாக பல பிரச்சினைகள் உருவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

வாய்மூல விடைக்காக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திறண எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like