Sri Lanka 24 Hours Online Breaking News

தனுஷ் – கார்த்திக் நரேன்: திருடன் – பொலிஸ் – மீடியா?

0

தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், அவர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அடுத்ததாக கார்த்திக் நரேனுடன் இணைந்து தனது 43ஆவது திரைப்படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

கார்த்திக் நரேன் சினிமா உலகில் எவ்வித அனுபவமும் இன்றி நுழைந்தவர். ஆனால், அவரது சரியான திட்டமிடல் அவருக்கு முதல் திரைப்படமான துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன்பின் அவருக்கு உண்டான டிமாண்ட் அவரை கௌதம் வாசுதேவ் மேனனிடம் கொண்டுபோய் சேர்த்தது. கௌதம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன், சில காரணங்களால் ரிலீஸாகாமல் போக, அடுத்ததாக மாஃபியா திரைப்படத்தை எடுத்தார்.

அந்தத் திரைப்படம் ரிலீஸுக்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது அடுத்த திரைப்படமாக தனுஷுடன் இணையும் திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக சினிமாக்களில் அறிவிக்கப்படும் சாதாரணமான ஓர் அறிவிப்பாக இல்லாமல், சத்யஜோதி ஃபிலிம்ஸ் என்ற ஒரு செய்தித்தாளில் திரைப்படம் பற்றிய செய்தி இடம்பெற்றிருப்பது போல டிசைன் செய்து ரிலீஸ் செய்திருக்கின்றனர்.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே, இந்த டிசைன் குறித்த தகவல்களை அறிய தயாரிப்பு தரப்பை அணுகி விசாரித்தபோது, “அந்த போஸ்டரிலேயே எல்லா தகவலும் இருக்கு. வேற எதுவும் இப்போதைக்குச் சொல்ல முடியாது” என்று கூறிவிட்டனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க, கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பதைத் தாண்டி எவ்வித அறிவிப்பும் அந்த போஸ்டரில் இல்லை.

அந்தச் செய்திக்குக் கீழே மட்டும் “பத்திரிகையாளரான குருமூர்த்தி என்பவர், புறநகர் சென்னையில் நடைபெற்ற ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்க, அவர்களது இளைய மகன் மிகவும் தைரியமான மனிதனாக நின்று, அவர் தந்தையின் வழியில் பயணிப்பதாக உறுதியெடுத்திருக்கிறார்” என்ற ஒரு துண்டுச் செய்தி இடம்பெற்றிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார்

ஒன்றுக்குப் பலமுறை இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் சிலர், ஒருவேளை தனுஷின் கேரக்டர்தான் அந்த இளைய மகனின் கேரக்டராக இருக்குமா? இந்த ஓப்பனிங்கிலிருந்து தொடங்கும் திரைப்படத்தைத்தான் தனுஷை வைத்து கார்த்திக் நரேன் எடுக்கப்போகிறாரா என்ற விவாதத்தை நடத்தி வருகின்றனர்.

கார்த்திக் நரேனை பொறுத்தவரையில் பொலிஸ், திருடன் தொடர்பான வழக்குகளை புதிய கோணத்தில் சிந்திக்கும் வழக்கம் கொண்டவர். எனவே, அவரது திரைப்படத்தின் ஹீரோ கேரக்டரை ஒரு பத்திரிகையாளராக வைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

படத்தின் போஸ்டரையும் நியூஸ் பேப்பர் மாடலிலேயே உருவாக்கியிருப்பதால், இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like