தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

24 மணித்தியால சுகயீன விடுமுறை போராட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் ஈடுபட்டு வருகின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரையில் அனைத்து தபால் ஊழியர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு, தபால் சேவைகள் அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நிறைவுக்கு வந்தது.

எனினும், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் தீர்மானித்திருந்தது.