தமிழகத்தில்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

வட தமிழகம், புதுவை கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 15 சென்டிமீட்டரும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 சென்டிமீட்டரும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் கும்பகோணத்தில் தலா 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play