இந்தியா

தமிழ்நாட்டில் சீன ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

தமிழ்நாட்டுக்கு வந்துள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு, சென்னை விமான நிலையத்தில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையம் முதல், சீன ஜனாதிபதி தங்கும் கிண்டி ஹோட்டல் வரையிலும், மிகுந்த உற்சாகத்துடன், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து, இன்று காலை புறப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன விமானப்படை விமானம் மூலம், பகல் 1.55 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தாம் தங்கும், கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஐந்து நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

விமான நிலையம் முதல் கிண்டி ஹோட்டல் வரை, சீன ஜனாதிபதிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல இடங்களில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன், சீன ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிண்டி ஐடிசி நட்சத்திர விடுதியின் முகப்பில், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களும், சீன மாணவர்களும், ஜி ஜின்பிங்கிற்கு வரவேற்பு அளித்தனர்.

சீன ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close