கந்தப்பளை

ஹபரண – தம்புள்ளை வீதியில் குடாமீகஸ்வெவ பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனமொன்றும், வானொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர்.

படுகாயமடைந்த இன்னுமிருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, ஹபரண பொலிஸார் தெரிவித்தனர்.

வான் சாரதி, அதில் பயணித்தவர்களில் பெண்கள் இருவர் பலியாகியுள்ளனர். காயமடைந்த இருவரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

பலியான மூவரும் பொலன்னறுவை கதுருவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை பக்கத்திலிருந்து தம்புள்ளை நோக்கி மணல் ஏற்றிக்கொண்ட பயணித்த டிப்பர் வாகனமும், தம்புள்ளையிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த வானுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.