தர்ஷன்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது. அதில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தர்ஷன்.

சேரனோடு சேர்த்து லொஸ்லியா வெளியேற்றம்? கெஞ்சிய கவின்

புதியமுகம் தர்சன்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்துள்ளார். இறுதி கட்ட போட்டியாளராக சென்று பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்தார்.

சர்ப்ரைஸ் வீடியோ கால்.! கண்ணீர் விட்டு கதறிய சாண்டி!

தர்சனுக்கு பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்கவில்லை என்ற கவலை ஒரு பக்கமிருந்தாலும், உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் தர்சன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.

மகத்-யாஷிகா படத்தின் டைட்டில் அறிவிப்பு!

அவர்கள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் நடிகை ஷெரின் தர்சனை காதலித்தார். தர்சன் நிலை தடுமாறாமல் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வந்தார். சேரனின் நடிப்பில் வெளிவர உள்ள ‘ராஜாவுக்கு செக் ‘ என்ற படத்தின் பிரிவியூ ஷோவை பார்க்க சேரன் தர்சனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதுகுள்ள பிக்பாஸ் சீசன் 3 வந்தாச்சா!

இதனால், தர்சன் தன்னுடைய காதலி சனம் ஷெட்டி உடன் சென்றிருந்தார். இதன் மூலம் தர்ஷன், சனம் ஷெட்டியை காதலிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தின் பிரிவியூ ஷோவுக்கு சென்றிருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளார்கள்.

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

தற்போது இந்த புகைப்படம் வேற லெவல்ல இணையங்களில் பயங்கரமாக பரவி வருகிறது.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk