தாக்குதல் முறியடிப்பு – 14 தலீபான் பயங்கரவாதிகள் பலி

79
colombotamil.lk

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறனர்.

அங்கு காந்தஹார் நகரிலும், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இருப்பினும் பாதுகாப்பு படைகள் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகள் எடுத்து அவர்களை ஒடுக்கி வந்தனர்.

இந்த நிலையில் காந்தஹார் அருகே அமைந்துள்ள போல்டாக் நிகா பொலிஸ் பாதுகாப்பு சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்துவதற்கு தலீபான் பயங்கரவாதிகள் நேற்று அதிகாலையில் முற்றுகையிட்டனர்.

பொலிஸார் நடத்திய எதிர் தாக்குதலில் சோதனைச்சாவடி தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதன்போது, 14 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்தனர். மேலும் 7 தலீபான் பயங்கரவாதிகளும், 4 பொலிஸ் அதிகாரிகளும் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 14 தலீபான் பயங்கரவாதிகள் பலியானார்கள்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!