ஊடக அறம், உண்மையின் நிறம்!

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 28-ஆம் தேதி கந்தசஷ்டி பெருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

இதனையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்குச் சென்று தங்கி விரதமிருந்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. கடலோரத்தில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.

காவல்துறை தென்மண்டல தலைவர் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App | Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.