ஊடக அறம், உண்மையின் நிறம்!

திருப்பதி பிரமோற்சவம் 5ஆம் நாளில் சுவாமி மோகினி அவதாரம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்த பிரம்மோற்சவத்தின் 5ஆவது நாளான இன்று மலையப்பசாமி மோகினி அவதாரத்தில் நான்குமாட வீதிகளில் சுவாமி வீதிஉலா இடம்பெற்றது.

லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு கருட சேவைக்காண திருமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று (04) காலை மலையப்ப சாமி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பட்டு வஸ்திரங்கள் அனிந்து மோகினி அவதாரத்தில் பல்லக்கில் மாடவீதிகளில் உலா வந்தார்.

பார்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்னும் பாம்பைக்கொண்டு அசுரர்களும் தேவர்களும் கடைந்தெடுத்தபோது, மகா விஷ்ணு நாச்சியார் என்னும் மோகினி திருக்கோலம் பூண்டு அமிர்தம் மட்டுமே தேவர்களுக்கு கிடைக்கச்செய்தார் என்றும், இதை சித்தரிக்கும் விதமாக இந்த வைபவம் நடைபெறுவதாகவும் ஐதீகம் கூறப்படுகிறது.

மேலும் மகா விஷ்ணு நாச்சியர் திருக்கோலத்தில் உள்ள தனது உருவத்தை தானே கிருஷ்ணராக தோன்றி தனது அழகை ரசித்ததை எடுத்துக்கூறும் வகையில், மற்றொரு பல்லக்கில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளின் போது பக்தர்களின் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், கோலட்டம், நடைபெற்றது.

லட்சக்கணக்காண பக்தர்கள் நான்கு மாடவீதியில் திரண்டிருந்து கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவையை கான லட்சக்கணக்கில் திருமலை வந்து குவிந்துள்ளனர்.

இதையொட்டி முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு விஷேச பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.