32 C
Colombo
Mon, 06 Apr 2020 03:28:33 +0530

யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை

கொரோனோ சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ் போதனா...
More

    திருப்பூர் – சேலம் கோர விபத்துகளில் 25 பேர் பலி

    COVID-19

    இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

    கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest Sir...

    கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம்

    கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட ஈக்குவேடார் மீதும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465...

    கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

    இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை...

    கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்

    இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. சீனாவில் தான் கொரோனா பரவியது என...

    திருப்பூரில் இன்று (20) அதிகாலை நடந்த கோர விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

    கேரள அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று பெங்களூருவிலிருந்து எர்ணாகுளம் நோக்கி நேற்று இரவு 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

    அதுபோன்று கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்றும் சென்றுள்ளது.

    இன்று அதிகாலை 3.15 மணி அளவில் அவிநாசி அருகே சென்று கொண்டிருக்கும்போது வேகமாக சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கேரள பேருந்து மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக சேதமடைந்தது. குறிப்பாகப் பேருந்தின் வலது புறம் முழுவதும் சுக்கு நூறாக நொறுங்கியது.

    இந்த கோர விபத்தில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பெண்கள் என 20 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

    22 பேர் படுகாயமடைந்து கோவை மற்றும் அவிநாசி பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இவ்விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் திருச்சூர், பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 48 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர்.

    தற்போது 20 பேர் வரை உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று இறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லை என திருப்பூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து கேரள தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதுபோன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நரி பள்ளம் பகுதியில் சுற்றுலா பேருந்தும் ஆம்னி பேருந்தும் மோதிய விபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

    20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

    இதயும் பாருங்க

    அண்மைய செய்திகள்

    இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

    கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest Sir...

    கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம்

    கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட ஈக்குவேடார் மீதும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465...

    கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

    இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை...

    கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்

    இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. சீனாவில் தான் கொரோனா பரவியது என...

    இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு

    கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest...