ஊடக அறம், உண்மையின் நிறம்!

தீபாவளி அன்று எண்ணெய்க் குளியல் செய்வதால் இவ்வளவு நன்மைகளா!

தீபாவளி அன்று காலை எழுந்ததும் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வழக்கம்.

தீமையைப் போக்கி நன்மையைக் கொண்டுவரும் தீபத்திருநாளாகத் தீபாவளி கருதப்படுகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, இந்தியாவின் புனித கங்கை நதியில் நீராடுவதற்குச் சமம் என்பது நம்பிக்கை.

இந்துக்கள் இதை ஒரு பாரம்பரியப் பழக்கமாகக் கடைபிடித்து வருகின்றனர். அது ஒருபுறமிருக்க, இது உடலில் என்னென்ன நன்மைகளை ஏற்படுத்துகிறது?

தலையில் மட்டுமல்ல, உடலிலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். அதனாலும் பல நன்மைகள் விளைகின்றன.

வெப்பமான காலத்தில் உடல் குளுமையாக இருக்க உதவுகிறது.

தலையில் எண்ணெய் தேய்த்துவிட்டு வெந்நீரில் குளிப்பது ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து இருப்பவர்களின் உடல் வலி நீங்கக்கூடும்.

தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தலைமுடி உதிர்வது குறைந்து வலுவாக வளரும்

தலையை நன்கு தேய்ப்பது இரத்த ஓட்டத்துக்கு நல்லது.

சருமம், தலைமுடி ஈரப்பசை இல்லாமல் வறண்டு காணப்பட்டால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

இரவில் ஆழ்ந்த தூக்கம் பெற உதவும்.

தீபாவளியன்று மட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது உடலுக்கும் மனத்துக்கும் நல்லது என்கின்றனர் மூத்தோர்.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk

 

Leave A Reply

Your email address will not be published.