சினிமா

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கிய ‘சங்கத்தமிழன்’!

தீபாவளி தினத்தில் விஜய்யின்’பிகில், கார்த்தியின்’கைதி மற்றும் விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மூன்று படங்களின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது திடீரென விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகியுள்ளது.

விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் வரும் நவம்பர் 8 அல்லது 15 ஆகிய திகதிகளில் ஒன்றில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வரும் தீபாவளியன்று விஜயின் ’பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் தீபாவளி தினத்தில் பிகில் படம் திரையிட புக் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மொத்தமுள்ள சுமார் 1000 திரையரங்குகளிலும் சுமார் 700 முதல் இடம் 750 திரையரங்குகளில் ’பிகில்’ திரைப்படம் திரையிடப்படும் என்றும் ’கைதி திரைப்படம் 200 முதல் 250 திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும் இந்த இரு படங்களின் ரிலீஸ் திகதி அதிகாரரபூர்வமாக அறிவித்த பின்னரே திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்த சரியான விவரங்கள் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுமா? அல்லது தீபாவளி அன்று ரிலீஸ் ஆகுமா? என்பது இனிவரும் அறிவிப்பை பொருத்து தான் தெரியவரும்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close