தீர்வொன்றை வழங்கும் வரை அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கபோவதில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

முஸ்ஸிம் பிரஜைகள் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும்வரை தாம் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க போவதில்லை என, தீர்மானித்துள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எச்.எம்.ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.